1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (15:53 IST)

திமுக பிரமுகர் பிரசன்னாவின் மனைவி தற்கொலை !

கொடுங்கையூர் பகுதியில் வசித்து வரும் திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா. இவரது மனைவி நதியா( 35). இத்தம்பதிக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது.  இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று நதியா தூக்கிட்டுள்ளார்.
 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த் தமிழன் பிரசன்னா நதியாவை மீட்டு செனை ஸ்டான்லி மருத்துவமனைவில் கொண்டு சேர்த்தார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் நதியா இறந்துவிட்டதாகக் கூறினார்.
 
இதுகுறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியிலும் திமுக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.