1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kumbakonam alchol drinkers dead

மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு: கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

கும்பகோணம்
கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இரண்டு பேர் பரிதாபமாக உயிர் இழந்ததாகவும் இதனை அடுத்து இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மதுவில் சரியாக போதையில்லை என்பதற்காக கூடுதல் போதைக்காக சானிடைசர் கலந்து குடித்த நிலையில் இரண்டு பேர் உயிரிழந்ததாக  முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
கும்பகோணம் மேல காவிரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் இருவரது உடலும் மீட்கப்பட்டதாகவும், இருவரது உடலும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது,
 
மேலும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கும்பகோணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
குறையத் தொடங்கிய நிபா தொற்று; கட்டுப்பாட்டில் தளர்வுகள்! – கேரள அரசு அறிவிப்பு!