வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (17:47 IST)

அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம்.. புதிய கூட்டணி குறித்து திட்டம்..!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்ட இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் புதிய கூட்டணி குறித்து திட்டமிட போவதாகவும் கூறப்படுகிறது. 
 
அக்டோபர் மூன்றாம் தேதி சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவின் மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது 
 
அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும்  பாஜக தலைமையில் புதிய அணி அமைக்க திட்டமிடப் போவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva