ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2024 (09:42 IST)

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வழக்கு.! மேலும் இருவர் கைது..!!

Krishnagiri Arrest
கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வழக்கில், என்சிசி பயிற்சியாளர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் தற்கொலை செய்து,கொண்டு உயிரிழந்தார். அதன் பிறகு இந்த வழக்கில் பள்ளியின் முதல்வர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்நிலையில் கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தற்போது மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் கோபு (42) என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்திருந்தும் அதற்கு துணையாக இருந்துள்ளார்.

சில தனியார் பள்ளிகளில் நடந்த போலி முகாம்களில் அவரும் கலந்து கொண்டுள்ளார்.  மேலும் போலியான என்சிசி முகாமுக்கு துணை போன காரணத்தினால் தற்போது கோபுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

 
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமனின் நண்பர் கருணாகரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.