1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (12:15 IST)

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு.! மேலும் ஒரு தனியார் பள்ளி முதல்வர் கைது..!!

Teacher Issue
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு தனியார் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.   
 
பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். 
 
இந்த புகாரில் முக்கிய குற்றவாளியாக போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், பயிற்சியாளர் உட்பட 11 பேர் கைதாகினர்.  கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிவராமன் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி உயிரிழந்தார்.  
 
மேலும் சிவராமன் வேறு எங்கெல்லாம் போலியாக என்சிசி முகாம் நடத்தினார் என போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு பள்ளியில் கடந்த ஜனவரியில்  போலியாக என்சிசி முகாம் நடைபெற்றதும், அங்கு 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக  பள்ளி பெண் முதல்வர் வினோதினி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.