1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Will DMDK and AMMK joins alliance?

ஓகே சொன்ன அமமுக: தாக்க தொடங்கிய தேமுதிக!

அமமுக
அதிமுக, திமுக என இரு கூட்டணியிலும் மாறி மாறி ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பேசி வந்த தேமுதிக, இன்று திடீரென இரு கூட்டணியையும் எதிர்க்க தொடங்கியதற்கு பின்னணியாக அமமுக இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது
 
சமீபத்தில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் தினகரனுக்கு நெருக்கமான ஒருவரை சந்தித்து நாம் இருவரும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கலாம் என கூறியபோது, தினகரனும் இதற்கு ஒப்புக்கொண்டாராம். இதனையடுத்தே தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்கள் முன் அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியையும் கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது
 
விஜயகாந்த், தினகரன், சரத்குமார், சீமான் மற்றும் சில கட்சிகளுடன் மூன்றாவது அணி அமைக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
இந்திய ராணுவ வீர்ர் கடத்தப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்