பாஜக பக்கம் சாயும் அதிருப்தி திமுகவினர்??

Sugapriya Prakash| Last Modified சனி, 21 நவம்பர் 2020 (09:49 IST)
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜக பொறுப்பாளருடன் சந்திப்பு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது.
 
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்துக்கொண்டு பின்னர் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துக்கொள்ள உள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. 
 
இன்று அமித்ஷா வரும் நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்திப்பு நடத்தியுள்ளார். மேலும் இவர் அமித்ஷாவையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :