திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (21:58 IST)

பாடகர் எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறப்பு...

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பாடகர் எஸ்.பி.பி காலமானார். ஒட்டுமொத்த இந்தியாவும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது.

இந்நிலையில், தமிழ்த் திரைத்துறையினர் பாடகர் எஸ்பிபிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, எஸ்.பி.பி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ ஆரம்பிக்கப்படும்  என டப்பிங் யூனியன் செயற்குழுவின் தலைவர் ராதாரவி செப்டம்பர் 30 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றினார்.

மறைந்த பாடகர் எஸ்பிபி இந்த டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினர் என்பதால் அவரது சாதனைகளைப் பெருமைப்படுத்தும் விதமாக  இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக நடிகர் ராதாரவி தெரிவித்தார்.

இந்நிலையில், சவுத் இண்டியன் சினி.டிவி ஆர்டிஸ்ட் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக எஸ்பிபி ஸ்டுடியோ என்ற பெயரில்  இந்த டப்பிங் யூனியனின் தலைவர் ராதாரவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்பட்டுள்ளது.