1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kovilpatti car accident three injured

கோவில்பட்டி அருகே கார் மீது மோதி விபத்து : 3 பேர் படுகாயம்

Kovilpatti
திருப்பூரிலிருந்து கார்த்திகேயன்(48) என்பவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூரில் சாமி கும்பிட்டு 2 கார்களில் திருப்பூருக்கு திரும்புக் கொண்டிருந்தார்.


 

 
காரை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி வந்தார். கோவில்பட்டி அருகே வரும் போது வாந்தி வருகிற மாதிரி தெரிகிறது என்று நாலு வழிச்சாலையில் இடது ஓரமாக காரை நிறுத்தியிருக்கிறார். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த லாரி கார் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில், காரில் இருந்த கார்த்திகேயன் , மணி(54), பாஸ்கர்( 45) ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர்.
 
அவர்கள் மூவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிற்காமால் சென்ற லாரி குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரையில்
பாலைவனத்தில் அதிர்ச்சி - 20 குழந்தைகள் உட்பட 34 அகதிகளின் உடல்கள்