1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2016 (17:50 IST)

பாலைவனத்தில் அதிர்ச்சி - 20 குழந்தைகள் உட்பட 34 அகதிகளின் உடல்கள்

நைஜீரியாவின் பரந்த பாலைவனத்தில் 20 குழந்தைகள் உட்பட 34 அகதிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடு அரசு நேற்று (புதன் கிழமை) அறிவித்துள்ளது.
 

 
அகதிகள், சஹாரா பாலைவனம் வழியாக லிபியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு சென்று குடியேறி வருகின்றனர். இந்நிலையில் 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உட்பட 34  பேரின் உடல்கள் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்ற போது  அசாமகா பகுதியில் ஜூன் 6 முதல் ஜூன் 12 இடைப்பட்ட நாட்களில் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மேலும் இந்த அகதிகள் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டுள்ளனர், அவர்களில் நைஜீரியாவை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் 26 -வயது பெண் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சர்வதேச குடியேறுவர் அமைப்பின் தகவலின் படி 1,20,000 நபர்கள் அகதேஸ் வழியாக சென்றுள்ளனர். கடந்த வருடம் 37 அகதிகள் பாலைவனத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.