வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2019 (11:56 IST)

அரசியலில் குதித்தார் கோவை சரளா!

நடிகை கோவை சரளா, தமிழ்சினிமாவில் காமெடி நடிகைகள் இல்லாத பற்றாக்குறையை போக்கியவர்.  


 
இவர் தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். கொங்கு தமிழில் கோவை சரளா செய்யும் காமெடிகள் பலரையும் ரசிக்க வைத்தது. 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த கோவை சரளா, இப்போது அரசியல் கட்சியில்  இணைந்துள்ளார்.  நடிகைகள் அரசியலில் இணைவது என்பது சாதாரணம் என்றாலும், நடிகை கோவை சரளா, தன்னுடன் ,இணைந்து நடித்த கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்துள்ளார்-
 


மக்கள் நீதி மையத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகை கோவை சரளா கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மையத்தில் இன்று இணைந்தார்.