புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (13:19 IST)

கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!

கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!
கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதாக கூறப்படுவதால் அந்த பகுதி மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் 
 
சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் ஏற்கனவே அதிக அளவு வரையிலான நீர் வெளியேற்றப்படுவது ஆக தகவல் வெளியானது. அதேபோல் பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் சோழவரம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 1585 கன அடி நீர்வரத்து இருப்பதால் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,200 கன அடியாக அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்