1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rain in Chennai till morning

2015 ஐ நினைவுபடுத்தும் அடைமழை… சென்னையில் பல இடங்களில் வெள்ளம்!

சென்னை
தமிழகம் முழுவதும் பல இடங்களில் பருவமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக மாறி வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று காலை முதல் தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது.

அதிலும் போரூர் வளசரவாக்கம் பகுதிகளில் வெள்ளக்காடாக இருப்பதால், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வெள்ளத்தை நினைவுபடுத்துவது போல உள்ளதாக பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
வன்கொடுமை செய்ததாக நாடகமாடிய மாணவி!