வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (15:05 IST)

மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்: சட்டப் போராட்டம் நடத்த உள்ள முன்னாள் உரிமையாளர்!

மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்: சட்டப் போராட்டம் நடத்த உள்ள முன்னாள் உரிமையாளர்!

கொடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதா உள்ளிட்ட சசிகலா குடும்பம் மிரட்டி வாங்கியதாகவும், அதை மீட்க சட்ட ரீதியாகப் போராட உள்ளதாகவும், அதன் முன்னாள் உரிமையாளர் வில்லியம் கிரேக் ஜோனின் மகன் பீட்டர் கிரேக் ஜோன் கூறியுள்ளார்.


 
 
நான்கு மாதங்களுக்கு முன்னர் இது குறித்து பேசிய பீட்டர் கிரேக் ஜோன் தற்போதைய ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டை லண்டனை பூர்வீகமாக கொண்ட தானது தந்தை 1975-ஆம் ஆண்டு முதலில் விலைக்கு வாங்கியதாக கூறினார். அதில் 1990-ஆம் ஆண்டு முதல் தேயிலை பயிரிடப்பட்டு அதனை ஏற்றுமதி செய்து நல்ல லாபம் ஈட்டி வந்தார்.
 
ஆனால் 1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரான பின்னர் அவரது நெருங்கிய நண்பர்கள் மூலம் ஜெயலலிதா இந்த எஸ்டேட்டை விரும்புவதாகவும், விலைக்கு கேட்பதாகவும் வில்லியம் ஜான்ஸ்-க்கு தகவல் கொடுக்கப்பட்டது. 906 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த எஸ்டேட்டை விற்க அதன் உரிமையாளருக்கு விருப்பம் இல்லை.
 
இந்நிலையில் வங்கிகள் மூலம் கடன் வாங்கியிருந்த வில்லியம் கிரேக் ஜோன்ஸ்-க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் நெருக்கடிக்கு உள்ளான அவர் கொடநாடு எஸ்டேட்டை விற்க முன்வந்தார். இந்த எஸ்டேட் விற்பனை பேரம் 2 ஆண்டுகள் நீடித்ததாகவும், இதற்காக ஜெயலலிதாவும், சசிகலாவும் அவரை 6 முறை சந்தித்ததாக கூறியுள்ளார்.
 
இறுதியாக 1994-ஆம் ஆண்டு 906 ஏக்கர் கொண்ட பல கோடிகள் விறபனை ஆகவேண்டிய கொடநாடு எஸ்டேட்டை வெறும் 7.6 கோடிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் கைப்பற்றியதாகவும் அதில் பாதி பணம் தான் கொடுத்ததாக ஜோன்ஸ் கூறியுள்ளார்.
 
இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில் அடியாட்கள் மூலம் தன்னை மிரட்டியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறினார் ஜோன்ஸ்ன்ஸ். மேலும் சசிகலா மற்றும் தற்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அடியாட்கள் தான் தன்னை மிரட்டி பணிய வைத்ததாக ஜோன்ஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
இந்நிலையில் சசிகலா குடும்பத்தை குறிவைத்து நடந்த வருமான வரித்துறை சோதனையில் கொடநாடு  எஸ்டேட்டும் தப்பவில்லை. இதனையடுத்து கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எங்களுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தற்போது, வருமானவரித்துறையினரும் ரெய்டு நடத்திவருகின்றனர். இதை எங்களுக்கு சாதகமாக்கி சட்ட ரீதியாக கொடநாடு எஸ்டேட்டை மீட்கப் போராடுவேன் என கூறியுள்ளார்.