ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (13:12 IST)

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஐடி ரெய்டில் தேடிய அதிகாரிகள்?

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஐடி ரெய்டில் தேடிய அதிகாரிகள்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சிகிச்சை பெற்ற வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், ஜெயலலிதா சசிகலாவிடம் பேசும் அந்த வீடியோவை வெளியிட்டால் சிலருடைய முகத்திரை கிழியும் எனவும் திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியிருந்தார்.


 
 
இந்த வீடியோவை கைப்பற்றத்தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக திவாகரன் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் சுஜய் என்ற இளஞன் அளித்துள்ள பேட்டி இதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.
 
சசிகலாவின் தம்பி திவாகரனின் வீட்டிற்கு சுஜய் என்ற இளைஞன் அடிக்கடி வந்து செல்வான். இதனால் சுஜய் வீட்டையும் வருமான வரித்துறையினர் விட்டுவைக்காமல் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை கூறித்து சுஜய் பேட்டியளித்துள்ளார்.
 
அதில், நீங்க என்ன வேலை செய்றீங்க, உங்கள் வருமானம் என்ன? என்று கேட்டார்கள். பாஸ் வீட்ல வேலை செய்றேன், ரியல் எஸ்டேட் செய்றேன்னு சொன்னேன். ஒவ்வொரு இடமா தேடினாங்க எதுவும் கிடைக்கலை. கடைசியா உங்களிடம் திவாகரன் தரப்பு கொடுத்துள்ள சிடி, பென்டிரைவ், லேப்டாப் எங்கே என கேட்டாங்க. என்னிடம் எதுவும் தரலன்னு சொன்னேன் என சுஜய் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து ஜெயலலிதா வமருத்துவமனையில இருக்கிற வீடியோவை வெளியிடுவோம்னு ஜெயானந்த் சொன்னதை வைத்து அந்த வீடியோ ஆதாரம் எங்கே என தேடுறாங்க போல திவாகரன் தரப்பு சந்தேகிக்கிறது.