1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kodaikanala forest fire comes under control

தனிந்தது கொடைக்கானல் மலைப்பகுதி காட்டு தீ!!

கொடைக்கானல்
கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 நாள்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ அணைக்கப்பட்டதாக வனத்துறை தகவல். 

 
தமிழகத்தின் மலைவாச சுற்றுலா தளமாக கொடைக்கானல் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் அருகே பெருமாள் மலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் திடீட் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியன.
 
வனத்துறையினர் 50க்கும் அதிகமானோர் பல்வேறு குழுக்களாக தீ தடுப்பு எல்லைகளை ஏற்படுத்தி நெருப்பைக் கட்டுப்படுத்தினர். வழக்கமாக கோடைகாலத்துக்கு முன்னர் அமைக்கப்படும் தீ தடுப்பு எல்லைகளை இந்த ஆண்டு வனத்துறையினர் அமைக்கவில்லை போலும் அதனால் தான் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. 
 
கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 நாள்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ அணைக்கப்பட்ட நிலையில், கோடைகாலத்தில் காட்டுத் தீயைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.