திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (00:07 IST)

பலூன் வியாபாரி பெண்..... மாடலிங்கில் நுழைந்து அசத்தல்....

கடந்த வாரம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒரு மாடலிங் கலைஞராக சமூகவலைதளங்களில் புகழ் பெற்றார்.

அதேபோல் தற்போது, வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கோயில் வாசலில் பலூன் விற்பனை செய்து வந்தார்.

அவரை புகைப்பட கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் புகைப்படம் எடுத்தார். அதன் பின்னர் பலூன் விற்பனை செய்த கிஸ்பு என்ற பெண்ணிடமும் அவரது தாயாரிடமும் அதைக் காட்டினார். அவர்கள் அனுமதியுடன் அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்., அது வைரலானது. பின்னர் கிஸ்புவை வைத்து  மாடலிங் செய்தார்.தற்போது அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் மாடலிங்கில் குவிந்து வருகிறது.