ஸ்டாலின் முதல்வரானதும்.. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! – கே.என்.நேரு எச்சரிக்கை!

KN Nehru
Prasanth Karthick| Last Modified புதன், 11 நவம்பர் 2020 (13:07 IST)
மு.க.ஸ்டாலின் முதல்வரானது அமைச்சர் துரைக்கண்ணு விவகாரம் முதல் அதிமுக செய்த அனைத்து ஊழல்கள் மீது விசாரணை நடைபெறும் என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மறைந்த அதிமுக அமைச்சர் துரைக்கண்ணு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள கே.என்.நேரு “எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று முதல்வராவார். மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் துரைக்கண்ணு விவகாரம் மட்டுமின்றி ஜெயலலிதா மரணத்தில் நடந்த சதி, குட்கா முறைகேடு, குவாரி ஊழல், ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு, கொரோனா கால கொள்முதல் ஊழல் என அனைத்தையும் விசாரிக்க நடவடிக்கை எடுப்பார். குற்றவாளிகள் தப்ப முடியாது என எச்சரிக்கிறேன்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :