வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2024 (11:17 IST)

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி..! எல்கே.சுதீஷ் உறுதி.!!

LKS
தமிழகத்தின் நலனின் அக்கறை கொண்டு நல்லது நினைப்பவரைததான் நாங்கள் பிரதமராக கை காட்டுவோம் என தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
 
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர்  கடலூரில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷ், தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு இருப்பதாகவும், செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் தங்களுக்கு வாக்கினை செலுத்துவதாக தெரிவிப்பதாகவும் கூறினார்.


கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 2011-ல் பெற்ற வெற்றி போல் 2024-லும் வெற்றி பெறுவோம் என தெரிவித்த எல்.கே.சுதீஷ் தமிழகத்தின் நலனின் அக்கறை கொண்டு நல்லது நினைப்பவரைததான் நாங்கள் பிரதமராக கை காட்டுவோம் என குறிப்பிட்டார்.