1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (22:34 IST)

உயிருக்கு போராடிய பூனைக்குட்டியை தீயணைப்பு வீரர்கள்

Cats
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனியார் திருமண மண்டபத்திற்குள் சிக்கி உயிருக்கு போராடிய பூனைக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.... 
 
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள ஸ்ரீ வன்னியர் குல சத்ரிய திருமண மண்டபத்தின் மாடியில் பூனை குட்டி ஒன்று மாட்டிக்கொண்டு இறங்க வழியின்றி சத்தமிட்டு உள்ளது. இதனை அறிந்த அந்த வழியாக வந்த சிறுவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து திருமண மண்டபத்திற்கு வந்த தீயணைப்பு துறையில் வீரர்கள் மாடியில் சிக்கித்தவித்த பூனையை பத்திரமாக மீட்டு பூனை உரிமையாளரிடம் கொடுத்துச் சென்றனர். ஒரு பூனை குட்டி என்று பாராமல் அதன் உயிரை காப்பாற்றிய தீயணைப்புத்துறை வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.