ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (22:33 IST)

தூய அன்னை மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்;சீறிப்பாய்ந்த மாடுகள் .

mattu vandi race
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தூய அன்னை மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்;சீறிப்பாய்ந்த மாடுகள் .
 
அருப்புக்கோட்டை அருகே பரளச்சி  கீழ்குடி கிராமத்தில் தூய அன்னை மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் விருதுநகர் மதுரை, சிவகங்கை  உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த  8 ஜோடி பெரிய மாடுகளும் 11 ஜோடி சிறிய மாடுகளும் பந்தயத்தில் பங்கேற்றன. மாட்டு வண்டி பந்தயத்தில் பங்கேற்ற மாடுகள் சீறிப்பாய்ந்தன.சிறிய மாட்டிற்கு 6 கி.மீ துாரமும் பெரிய மாட்டிற்கு 8 கி.மீ துாரமும் பந்தய துாரமாக நிர்ணயிக்கப்பட்டது.வெற்றி பெற்ற மாடுகளுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.சீறிப் பாய்ந்து சென்ற காளைகளை மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். பந்தயத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.மேலும் இந்த மாட்டு வண்டி பந்தயங்களை காண அருப்புக்கோட்டை பரளச்சி, கீழ்குடி, பெருநாழி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்