திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (22:25 IST)

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது

விருதுநகர்  குல்லூர்சந்தை பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது 30 கிலோ குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
 
விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தையில் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (54) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
 
இந்த மளிகைகடையில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை  அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவுபடி சார்பு ஆய்வாளர்கள் கார்த்திகா, சிவனேசன், முதல் நிலைக் காவலர்கள் மாரிமுத்து, திலிப் குமார் ஆகியோர் தலைமையில்  அந்த கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்று சோதனை செய்தனர்
 
அந்த சோதனையில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற போதைப்  பொருட்கள் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது மேலும்  கடை உரிமையாளர் மாரியப்பன் (54) என்பவரை சூலக்கரை காவல்துறையினர்  கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.