செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (13:13 IST)

கிரண் பேடியின் சொல்போன் மாயம் – 20 நிமிடங்களுக்கு உடைந்த நிலையில் கண்டுபிடிப்பு !

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது அவரது செல்போன் காணாமல் போனது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலமாக உள்ள பாகூர் ஏரியை சுற்றி 3000 மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வந்திருந்தார். மரக்கன்று நடும் வேலையில் தீவிரமாக இருந்த அவர் தன்னுடைய செல்போனைத் தேட தன் பையினுள் பார்க்க மாயமாகியுள்ளது.

இதுபற்றி தனது பாதுகாவலர்களிடம் சொல்ல உடனடியாக அந்த இடம் பரபரப்பாகியுள்ளது. கிட்டத்தட்ட 20 நிமிடம் தேடியும் கிடைக்காத செல்போன் பின்னர் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரண்பேடியே தவறுதலாக தொலைத்தாரா அல்லது வேறு யாரேனும் திருடிவிட்டு பின்னர் சேதப்படுத்தி போட்டனரா என்று தெரியவில்லை.