வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (19:36 IST)

’சாம்சங் ’ நிறுவனத்தின் மடிக்கும் வகை செல்போன் அறிமுகம் !

இன்றைய  இணையதள உலகில் மக்களிடம் செல்போன் இல்லாமல் பார்ப்பது அபூர்வம். குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரையும் செல்போன் கவர்ந்துள்ளது. முக்கிய பொழுதுபோக்கு சாதனமாகவும் அது திகழ்கிறது.
இந்நிலையில் உலக ஸ்மார்ட் போன் சந்தையில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ள சாம்சங் நிறுவனம் அவ்வப்போது சில செல்போன் மாடல்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்.
 
இந்நிலையில், இன்று, சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்செல்போனை (Galaxy Fold) தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர். இந்த புதுவகையிலான மடிக்கும் செல்போனை  வாங்குவதற்காக வாடிக்கையாளர், அங்குள்ள,  சாம்சங் கடைகளில் வரிசையாக நின்றிருந்தனர்.
 
இந்த மடிக்கும் வகை ஸமார்போனில் உள்ள  சிறப்பம்சங்கள் என்னவென்றால், இதன் திரையை தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஒரே நேரத்தில்  3 செயலிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் விலை  ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.