கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பயணிகள் திடீர் போராட்டம்: தேர்தல் நாளில் இப்படி ஒரு அதிருப்தியா?
தேர்தலுக்கு வாக்களிக்க சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் திடீரென போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் காரணமாக தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் பயணிகளின் கூட்டம் நேற்று இரவு முதல் அதிகரித்தது
குறிப்பாக கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறைவாக இருந்ததாகவும் அதிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது
அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் இருந்ததால் பேருந்தில் பொதுமக்கள் முந்தி அடித்துக் கொண்டு ஏறினார்கள். 10,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு தெரிவித்தும் பயணிகளுக்கு போதுமான பேருந்துகள் இல்லை என்று கூறி திடீரென பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவு 12 மணி அளவில் கிளாம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது
பேருந்துகள் கிடைக்காத ஆத்திரத்தில் பயணிகள் அரசை கடுமையாக விமர்சனம் செய்ய தேர்தல் நாளில் எப்படி ஒரு அவப்பெயரா? என்று திமுகவினர் கலக்கமடைந்துள்ளனர்.
Edited by Siva