1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (07:38 IST)

தென் மாவட்டங்களுக்கு செல்லும்.. ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்.. பயணிகள் தவிப்பு.. என்ன காரணம்?

Train
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ரயில் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளால் பயணிகள் பெறும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேல்மருவத்தூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஜோத்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஆவதற்கு உள்ளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த பகுதியில் அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்படுவதால் ரயில்கள் தாமதம் ஆகி செல்வதாக பயணிகள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். குறிப்பாக செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் பகுதியில் தான் அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்கள் மிக விரைவில் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் கிளம்பும் என்று தெரிகிறது. சொந்த ஊர் செல்லும் பயணிகள் ரயில்கள் தாமதம் ஆவதால் திட்டமிட்டபடி நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்பி வருகின்றனர்.

Edited by Siva