1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (11:29 IST)

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க ஒரு ஆண்டு ஆகுமா? அதுவரை மக்களுக்கு திண்டாட்டமா?

Kilambakkam
சென்னை நகரிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நகரில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற எந்த வசதியும் இல்லாமல் 
 
கிளாம்பாக்கத்திற்கு போதுமான பேருந்துகளை இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தாலும் அந்த பேருந்துகள் எந்த அளவுக்கு இயங்கும், அவை மக்களுக்கு போதுமானதா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து ரயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியது 
 
இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய ரயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை வைத்துள்ளது. எனவே இந்த ஆண்டு முழுவதும் கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு சிக்கல் தான் என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.
 
Edited by Mahendran