1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (10:26 IST)

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் சுவர் இடிப்பு: திறந்த சில நாட்களில் சேகர் பாபு உத்தரவு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து வைத்து ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் பயணிகளுக்கு இடைஞ்சலாக உள்ள சுவரை இடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தென் மாவட்ட மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது என்பதும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை என்றும் சர்வீஸ் சாலையை பயன்படுத்துவதால் அந்த பகுதி மக்கள் சிரமப்படுவதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடைஞ்சலாக உள்ள சுவரை இடிக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு சில நாட்களில் இந்த சுவர் இடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் இந்த சுவர் காரணமாக பயணிகள் சுற்றி செல்ல வேண்டிய இருப்பதால்  இடிக்க உத்தரவிட்டுள்ளாக அமைச்சர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran