திங்கள், 21 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:15 IST)

தவறுதலாக உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு திறக்க தெரியாமல் தவிப்பு – போராடி மீட்ட தியணைப்பு துறை!

திண்டுக்கல்லில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் குழந்தை ஒன்று தாழ்ப்பாள் போட்டு அறைக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மேங்கில்ஸ்ரோடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிவகாமி நாதன் என்பவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவரின் குழந்தையான ஆஷிவ் அதர்வா தன்னுடைய அறைக்கதவை உள்பக்கமாக சாத்தி தவறுதலாக பூட்டிக் கொண்டுள்ளார். கதவில் ஆட்டோமெட்டிக் பூட்டு இருந்ததால் வெளிப்பக்கத்தில் இருந்து திறக்க முடியவில்லை. இதனால் குழந்தை அழ ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து வேறு வழியில்லாமல் கதவில் ஓட்டை போட்டு குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.