வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:39 IST)

ஈழத் தமிழராக ஜெயம் ரவி… கல்யாண் இயக்கும் படத்தின் அப்டேட்!

இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். ஆனால் இயக்குனருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீண்டகாலமாக முடங்கிக் கிடந்தது. இதையடுத்து இப்போது பூலோகம் இயக்குனரின் இரண்டாவது படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி இப்போது ஈழத் தமிழராக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.