1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 18 ஏப்ரல் 2022 (11:19 IST)

கருத்து சுதந்திரம் கேட்பவர்கள் இளையராஜாவை ஏன் விமர்சிக்கனும்? குஷ்பூ

இளையராஜா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவதற்கு நடிகை குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இளையராஜா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பூ, மத்திய அரசு கருத்து சுதந்திரம் அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கும் இடதுசாரி எதிர்க்கட்சிகள்தான், இன்று ஒன்று திரண்டு அம்பேத்கர் - மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.