வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (07:55 IST)

நாளை முதல் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்த ஆண்டு கோடை காலத்தில் பெரிய அளவில் வெப்பம் இல்லாமல் பொதுமக்கள் தப்பித்த நிலையில் அடுத்தடுத்து செய்த கனமழை மற்றும் புயல் காரணமாக அக்னி நட்சத்திர காலத்தில் சில நாட்கள் குளிர்ச்சியான தட்பவெப்பம் இருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் மீண்டும் கடந்த சில நாட்களாக வெப்பம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை காரணமாக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவது மற்றும் தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வருவதால் நாளை முதல் அதாவது ஜூன் 1 முதல் தமிழகத்தில் சில இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் கன மழை வர பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளிலும் திருச்சி, நாமக்கல் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இன்றும் நாளையும் சூறாவளி காற்று அடிக்க வாய்ப்பு இருப்பதால் குமரி கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva