திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (17:06 IST)

நடிகை குஷ்புவின் சமூக வலைதள கணக்கு முடக்கம்!

தென்னிந்திய சினிமாவில்  90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பு. இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு திமுகவில் இணைந்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால், காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு உரிய பதவிகளும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கவில்லை என கூறப்பட்ட நிலையில் கடந்தாண்டு பாஜகவில் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கி தோல்வியுள்ளார்.

இந்நிலையில் , நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடக்கப்பட்டது. இதனை அடுத்து தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும், தனது ட்விட்டர் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் கடந்த 20ஆம் தேதி டிஜிபி டிஜிபியிடம் நடிகை குஷ்பு புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் தற்போது நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யாரென்று டுவிட்டர் நிர்வாகத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளிவந்தது.

இந்த கடிதத்திற்கு டுவிட்டர் நிர்வாகம் அளிக்கும் பதிலை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை சென்னையில் போலீசார் எடுப்பார் சைபர் கிரைம் போலீசார் எடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.