1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (09:35 IST)

தெரு நாய்கள் கருணை கொலை செய்யப்படுகிறதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா..!

Street Dogs
துருக்கியில் வீதியில் 40 லட்சம் தெரு நாய்கள் உலாவி வரும் நிலையில் அந்த நாய்களை அப்புறப்படுத்த நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெரு நாய்கள் குறுக்கே வருவதால் ஏற்படும் விபத்துக்கள், தெரு நாய் கடிக்கு ஆளாகும் மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண துருக்கி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

துருக்கியில் சுமார் 40 லட்சம் தெரு நாய்கள் வீதிகளில் உலா வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெரு நாய்களை தத்தெடுக்கும் முறையை ஊக்குவிக்க தாங்கள் மசோதா கொண்டு வர இருப்பதாக ஆளும் கட்சி கூறுகிறது.

அதே நேரத்தில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்று ஒருசிலர் கூறி வந்தாலும் பெரும்பாலான மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெறும் 2.7 சதவீதம் பேர் மட்டுமே தெருநாய்களை கருணை கொலை செய்ய ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். எனவே தான் தெரு நாய்களை தத்தெடுக்கும் முறையை ஊக்குவிக்க மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

Edited by Siva