1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஜூலை 2021 (19:32 IST)

கேரளாவில் ஜிகா வைரசால் பாதிப்பு 38ஆக உயர்வு!

கேரளாவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவில் ஏற்கனவே ஜிகா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் ஒருவர் ஜிகா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளார். இதனை அடுத்து இதுவரை ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது
 
இந்த நிலையில் தற்போது ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து குணமாகி 30 பேர் வீடு திரும்பி விட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மூன்று நாட்கள் தளர்வு என அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது