ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து!
இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் டிவிட்டர் மூலமாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அந்த டிவீட்டில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நீங்கள் அதற்குத் தயாராக இருப்பீர்கள் என்று தெரியும். நாட்டு மக்கள் அனைவரும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளார்.