செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : செவ்வாய், 20 ஜூலை 2021 (16:15 IST)

பிசாசு 2 படத்தில் இணைந்த நடிகை!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி புதிதாக இணைந்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகளை இயக்குனர் மிஷ்கின் படமாக்கி விட்டாராம். இன்னும் கிளைமேக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளது. இந்நிலையில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி படக்குழுவோடு இணைந்துள்ளார்.