ஆஸ்பெட்டாஸ் ஷீட், தகர ஷீட் கொண்ட தொழிற்சாலைகளை மூட வேண்டும். முதல்வர் உத்தரவு..!
வெயிலின் கொடுமை அதிகமாகியதை அடுத்து தகர சீட் மற்றும் ஆஸ்பெட்டாஸ் சீட் கொண்ட தொழிற்சாலைகள் பகல் நேரத்தில் மூட வேண்டும் என கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்கள் ஆக கடும் வெயில் அடித்து வரும் நிலையில் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன
இதனை அடுத்து ஆஸ்பெட்டாஸ் தகர சீட்டுகளால் மேல் கூரைகளை கொண்ட தொழிற்சாலைகளை பகல் நேரங்களில் மூட வேண்டும் என்றும் அதேபோல் இதுபோன்ற கூரைகள் கொண்ட அறைகளில் தங்கும் தொழிலாளர்கள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்
மேலும் பகல் நேரத்தில் வெயில் படும் வகையில் தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க கூடாது என்றும் தீயணைப்புத்துறை என்சிசி உள்ளிட்டவர்களுக்கு பகல் நேரத்தில் பரேடு பயிற்சிகள் வேண்டாம் என்றும் முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
Edited by Siva