1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (19:48 IST)

பள்ளி, கல்லூரிகளில் திரைப்படம்.. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

பள்ளி கல்லூரிகளில் திரைப்படம் திரையிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பள்ளி கல்லூரிகளில் கல்வி சம்பந்தமான திரைப்படம் திரையிடுவது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது பள்ளி கல்லூரி கல்லூரிகளில் கல்வி தொடர்பான படம் திரையிடுவது பரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது 
 
முன்னதாக விசாரணையின் போது 2024-25 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் திரையிடுவதற்காக அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார் 
 
நடப்பு கல்வி ஆண்டில் கல்வி தொடர்பான திரைப்படங்களை திரையிட அரசு எந்தளவு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் மனுதாரர் கூறிய நிலையில் வரும் கல்வி ஆண்டில் இது குறித்து உத்தரவு விரைவில் தமிழ்நாடு அரசு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva