1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (07:27 IST)

எந்த வழக்கையும் சந்திக்க தயார்: கே.சி.வீரமணி பேட்டி!

முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர் என்றும் இந்த சோதனைகள் சோதனையில் முப்பத்தி நான்கு லட்ச ரூபாய் ரொக்கம், ஐந்து கிலோ தங்கம், ரோல்ஸ்ராய்ஸ் கார் உள்பட பல சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
கே சி வீரமணி தன்னுடைய வேட்புமனுவில் 25 கோடி என சொத்து மதிப்பு குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது 28 கோடிக்கும் மேலாக அவரது சொத்து இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் தனது வீட்டில் நடந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கேசி வீரமணி போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் எந்த வழக்காக இருந்தாலும் அதை நீதிமன்றத்தில் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.