1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (09:01 IST)

275 யூனிட் மணலை பதுக்க வீட்டில் வைத்த கே சி வீரமணி ?

30 லட்ச ரூபாய் மதிப்பில் 275 யூனிட் மணலை முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல். 

 
முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். கே.சி.வீரமணி வீடுகளில் இருந்து பணம், நகை, கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
சோதனையின் போது, 34.01 லட்ச ரூபாய் பணம், 4,987 கிலோ மதிப்பில் 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி, வங்கிக் கணக்கு மற்றும் புத்தகங்கள் முக்கிய ஆவணங்கள், ரோல்ஸ்ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல். 
 
இதனோடு 30 லட்ச ரூபாய் மதிப்பில் 275 யூனிட் மணலை தனது வீட்டில் அமைச்சர் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.