செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:02 IST)

திருமலா பால் நிறுவன மேலாளர் வீட்டுக்கு சீல்வைப்பு!

திருமலா பால் நிறுவனர் மேலாளரின் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சீல் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இன்று காலை முதல் முன்னாள் அதிமுக அமைச்சர் கேசி வீரமணி யின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. மேலும் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், நண்பர்கள், சகோதரர்கள் ஆகியோர்களின் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி ஆதரவாளரும் திருமலா பால் நிறுவன மேலாளருமான ராம ஆஞ்சநேயர் வீட்டுக்கும் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவருடைய வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து சோதனை செய்ய வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவருடைய வீட்டுக்கு சீல் வைத்து விட்டு திரும்பி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.