தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறதா? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

high court
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறதா?
siva| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (16:03 IST)
தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒரு துறை உள்ளது என்பது கடந்த சில வருடங்களாகவே யாருக்கும் தெரியாமல் உள்ளது. இந்த துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை. இப்படி ஒரு துறை உள்ளது என்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி எந்த அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படுகிறது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டு உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை ஐகோர்ட், இதுகுறித்து தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :