1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (10:54 IST)

அறுவை சிகிச்சைக்கு பின் செந்தில் பாலாஜியின் உடல்நிலை: காவேரி மருத்துவமனை அறிக்கை

அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், ‘புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது என்றும், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது, சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை 5.30 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு 10.30 மணிக்கு முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran