தொடர்புடைய செய்திகள்
- செந்தில் பாலாஜி, மு.க. ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்: டாக்டர் கிருஷ்ணசாமி..!
- செந்தில் பாலாஜி மனைவி புகார்: அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
- செந்தில் பாலாஜியை கைது செய்த நோக்கம் பயனற்றதாகிவிட்டது: அமலாக்கத்துறை
- அமலாக்கத் துறையின் மேல்முறையீடு.. செந்தில்பாலாஜியின் மனைவி கேவியட் மனு..!
- 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது.. எத்தனை மணி நேரம் நடைபெறும்?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை இன்று நடைபெறும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் தொடங்கியது.
பைபாஸ் அறுவை சிகிச்சை எப்படி நடைபெறும்? எவ்வளவு நேரம் நடைபெறும்? என்பது இருதய மருத்துவ நிபுணர்கள் கூறியதை தற்போது பார்ப்போம்.
பைபாஸ் அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் வரை நடைபெறும் என்றும், ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு அதன்பின் அறுவை சிகிச்சை தொடங்கும் என்றும் கூறினர்.
மேலும் சாதாரணமாக ஒன்று முதல் 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும் என்றும், பைபாஸ் செய்தால் ஒரு மாதம் வரை ஓய்வில் இருப்பது அவசியம் என்றும், பழைய நிலைமைக்கு திரும்ப 3 மாதங்கள் வரை ஆகும் என்றும், பைபாஸ் சிகிச்சை நடைமுறைகள் நோயாளிகளை பொறுத்து சற்று வேறுபடலாம் என்றும் தெரிவித்தனர்.
மேலும் பைபாஸ் சிகிச்சை பெற்றவர்களை 7 நாட்களுக்கு பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்வார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
