கெட்ட காலத்திலும் ஒரு நன்மை… ஊரடங்கால் காவிரி நீரின் தரம் உயர்வு!
கொரோனா லாக்டவுன் பிறகு காவிரி நீரின் தரம் உயர்ந்துள்ளதாக ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆனாலும் அவற்றால் சில நன்மைகளும் நடந்துள்ளன. பெரும்பாலான வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்காததால் ஒலி மாசு மற்றும் காற்று மாசு குறைந்துள்ளது.
இந்நிலையில் இப்போது காவிரி நீரின் தரமும் உயர்ந்துள்ளது. கர்ர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பெருவாரியான இடங்களில் பாயும் காவேரி ஆற்றில் ஊரடங்கு காலத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் நடத்தப்பட்ட சோதனைகளில் தரம் இப்போது உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.