தொடர்புடைய செய்திகள்
- நம்ம காதலுக்கு என் புருஷன் ஒத்துக்கல - விரக்தியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
- 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்யவிருந்த 43 வயது அதிமுக எம்.எல்.ஏ - கடைசி நேரத்தில் மணமகள் ஓட்டம்
- தேக்கி வைக்க இடமில்லாமல் வீணாக கடலில் கலந்த 100 டிஎம்சி காவிரி நீர்
- வெள்ளம் பாதித்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்; முதல்வர் எடப்பாடி
- கடலில் கலக்கும் காவிரி நீர்! இதற்குத்தானா இத்தனை போராட்டம்
கரும்பச்சை நிறமாக மாறிய காவிரி நீர் – விவசாயிகள், பொதுமக்கள் பீதி
ஈரோடு மாவட்டத்தில் காவிரி தண்ணீர் கரும்பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதைக் கண்டு அங்குள்ள பொதுமக்களும் விவசாயிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் பகுதிக்கு அருகில் ஓடும் காவிரி நீர் சாயப்பட்டறை மற்றும் தோல் தொழிற்சாலைக் கழுவுகளால் மாசுபட்டு வருகிறது. கடந்த மாதம் பெய்த பெருமழையில் ஆற்றில் தேங்கியிருந்த கழிவுகள் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் ஒரு மாதமாக தெளிவாக ஓடிய காவிரி நீர் தற்போது அடர்பச்சை நிறத்துக்கு மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காவிரி ஆற்றில் இருந்து துரநாற்றமும் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் அந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அந்த தண்ணீரைக் குடிக்கும் ஆடு மாடுகள் உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிறமாற்றத்துக்குக் காரணமாக பொதுமக்கள் ‘மீண்டும் சாயப்பட்டறைகளும் தோல் தொழிற்சாலைகளும் வழக்கம்போல தங்கள் கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலந்து விடுகிறார்கள்’ என்று கூறுகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
