புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (22:38 IST)

கடலில் கலக்கும் காவிரி நீர்! இதற்குத்தானா இத்தனை போராட்டம்

கடந்த சில மாதங்களுக்கு முன் காவிரியில் தண்ணீர் விட கோரி கர்நாடக அரசை எதிர்த்து தமிழகம்  முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டத்தின் காரணமாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகவும் காவிரி விஷயத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைத்தது.
 
இந்த நிலையில் காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடத்தில் 98 ஆயிரம் கன அடிநீர் தற்போது திறந்து விடப்படுகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். 
 
ஆனால் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளோ, கதவணைகளோ இல்லாத‌தால், கர்நாடக அரசிடம் இருந்து போராடி பெற்ற காவிரி நீர், தற்போது நேரடியாக கடலில் கலந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறி வருகின்றனர். 
 
இனிவரும் ஆண்டுகளிலாவது, பருவ காலம் தொடங்கும் முன்பே மராமத்து பணிகளை முடிப்பதுடன், கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.