வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 மார்ச் 2019 (11:41 IST)

என்ன நடந்தது? 7 வருஷத்துல ஒரு புகார் கூடவா கொடுக்கல? கொதித்தெழுந்த கஸ்தூரி!!!

பொள்ளாச்சி விவகாரத்தில் இத்தனை வருடங்களாக ஒரு புகார் கூடவா கொடுக்கப்படவில்லை என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என பேசப்படுகிறது.
 
பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய கஸ்தூரி, பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த விஷயம் 7 வருடங்களாக நடக்கிறது என கூறுகிறார்கள். இந்த 7 வருஷத்துல இவனுங்கள பத்தி ஒரு புகார் கூடவா காவல் நிலையத்தில் கொடுக்கல? புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கலையா? 
 
தீர விசாரித்து இந்த விவகாரத்தில் பின் உள்ளவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பேசினார்.