வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (10:38 IST)

பெண் டாக்டரை சீரழித்த பொள்ளாச்சி கும்பல்: விசாரணையில் அம்பலம்!!!

பொள்ளாச்சியில் அட்டூழியம் செய்த கும்பல் ஒரு பெண் டாக்டரை ஏமாற்றி பணம் பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200 பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என பேசப்படுகிறது.
 
இவன்களை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. அதில் ஏராளமான பெண்களை இவன்கள் சீரழித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரை 2 வருடங்களுக்கு முன்னர் ஏமாற்றி சீரழித்து அவரிடம் பணம் பறித்துள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவர் போலீஸில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
இந்நிலையில் தற்போது அந்த பெண் மருத்துவர் மீண்டும் அந்த அயோக்கியன்கள் மீது புகார் அளித்துள்ளார். போலீஸார் அப்பொழுதே இந்த கேடுகெட்டவன்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இவன்கள் அப்பொழுதே மாட்டியிருப்பார்கள்.